நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அந்த வகையில் வருகின்ற 13ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பலவும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியினரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். சமீப காலமாக காங்கிரஸ் கட்சியினரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான காந்திலால் புரியா மற்றும் நேற்று மத்திய பிரதேசத்தில் உள்ள ரட்லம் தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் 2 மனைவிகளை திருமணம் செய்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். அதேபோன்று பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ‌.1 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இவர் ஆண்கள் இரண்டு திருமணம் செய்தால் அவர்களுக்கு ஆண்டுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நரேந்திர சலுஜா புகார் கொடுத்துள்ளார். மேலும் அவர் பெண்களை இழிவுபடுத்தும் காங்கிரஸ் கட்சியினருக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார்.