தமிழகத்தில் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம். திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பேருந்துகளில் மட்டும் இலவச பயணம். இந்நிலையில் ஐயப்பன் தாங்கலிலிருந்து பிராட்வே நோக்கி ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வடபழனி அருகே சென்றபோது சில இளைஞர்கள் பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதாவது நீங்க ஓசி டிக்கெட்டில் தானே பயணம் செய்கிறீர்கள். நாங்க பணம் கொடுத்து டிக்கெட் எடுத்துட்டு வாரோம் என்று கூறி சீட்டில் அமர்ந்திருந்த வயதானவர்கள் மற்றும் பெண்களை எழுப்பி விட்டு இளைஞர்கள் அமர்ந்து கொண்டனர். இதற்குப் பெண் பயணிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த இளைஞர்கள் அவர்களிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.