நாட்டில் அதிகரிக்கும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கேரள காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அதாவது அதிக கட்டணம் வசூலிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் பெரும்பாலும் காலியாகவே செல்கிறது. அதேசமயம் மற்ற ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அதிகரிக்கும் மக்கள் தொகை காரணமாக ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கேரளா காங்கிரஸ் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனால் தங்கள் கோரிக்கையை அவர் ஏற்க மறுப்பதாக கேரள காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளதோடு தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நடிகர் அமிதாப்பச்சனிடம் கேட்டுள்ளார். இது குறித்து கேரளா காங்கிரஸ் கட்சி எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், அதிகரிக்கும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு நாங்கள் ரயில் சேவைகளை அதிகரிக்க வேண்டும் என கூறுகிறோம். மேலும் பிரபலங்களின் கோரிக்கையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடனடியாக ஏற்பார் என்பதால் எங்களுக்காக நடிகர் அமிதாபச்சன் குரல் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதோடு ரயிலில் பயணிகள் கூட்டமாக பயணிக்கும் வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.