
தமிழ் திரை உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் அறியப்பட்டவர் பிரதிப் ரங்கநாதன். இவரது நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிராகன். இந்த படம் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதனிடையே நேற்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏண்டி விட்டுப் போன’ என்ற பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது. இந்த பாடலை சிம்பு தான் பாடியுள்ளார். இந்நிலையில் சிம்புவுக்கு நன்றி தெரிவித்து பிரதீப் ரங்கநாதன் எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் வேற ஒருத்தரோட படத்திற்கு பிரமோ பண்ணுவதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்றும் என்ன கிடைக்கும் என்று யோசிக்காமல் என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கிறவன் மாஸ் என்றும் நீங்க மாஸ் சார் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் பாடல் பாடியதற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் வருகின்ற 28ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.