சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன். இருந்தாலும் இதற்கெல்லாம் ஒரே தீர்வு முழுமையான நீட் தேர்வில் இருந்து விலக்கு தான். இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் ஏற்படும் போது தான் நடக்கும் என தெரிவித்துள்ளார்.