
நீட் வினாத்தாளின் விடையை அறிந்து கொள்வதற்கு உதவிய பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்து வரும் நான்கு இளநிலை மருத்துவ மாணவர்களை cbi கைது செய்துள்ளது. அதன்படி கரண் ஜெயின், குமார் சானு, ராகுல் ஆனந்த் மற்றும் சந்தன் சிங் ஆகிய நான்கு மருத்துவ மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான பங்கஜ் சிங்குக்கு நீட் வினாத்தாளின் விடையை அறிந்து கொள்ள உதவியதாக சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.