உளுந்தூர்பேட்டை அருகே அரசுப்பேருந்து நடத்துனர் – டிக்கெட் பரிசோதகர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

விழுப்புரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தி, கெடிலம் பகுதியில் டிக்கெட் பரிசோதகர் சண்முகம் ஏறினார்.

பேருந்தில் பயணிகள் குறைவாக இருப்பதாக கூறி, நடத்துனர் சுபாஸ் சந்திர போஸ் உடன் டிக்கெட் பரிசோதகர் வாக்குவாதம் செய்தார்.

திருநாவலூர் காவல் நிலையம் வரை விவகாரம் சென்ற நிலையில், இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக எழுதி கொடுத்தனர்.

இருந்தபோதும், நடத்துனர் சண்முகத்திற்கு 10 நாட்களாக பணி வழங்காமல் அதிகாரிகள் பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.