
டைரக்டர் வெங்கட் பிரபு இப்போது இயக்கிவரும் படம் “கஸ்டடி”. இந்த படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பில் இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இத்திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் சேர்ந்து இசையமைக்கின்றனர்.
அதோடு இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் சூட்டிங் அண்மையில் நிறைவுபெற்றது. இந்த நிலையில் கஸ்டடி படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் டீசர் வரும் 16ம் தேதி மாலை 4:51 மணிக்கு வெளியாகுமென வெங்கட் பிரபு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளார். இந்த வீடியோவை ரசிகர்கள் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.
This is just a tease not the teaser!!
The HUNT will begin on 16th March at 4:51PM! 🔥https://t.co/30TBeWeCp2 #Custody #CustodyOnMay12@chay_akkineni @IamKrithiShetty @thearvindswami @ilaiyaraaja @thisisysr @srinivasaaoffl @realsarathkumar @SS_Screens
— venkat prabhu (@vp_offl) March 13, 2023