
நீலகிரி வரையாடு வளங்காப்புத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான செலவினமானது 25.14 கோடி ரூபாய் ஆகும். இத்திட்டமானது 2022 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையில் 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில், ரேடியோ அலைவரிசை கழுத்துப் பட்டையையும் மற்றும் இதரப் பொருட்கள் உள்ளிட்ட ரேடியோ அலைவரிசை தொலைவு கணிப்பியல் மூலமாக நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதற்கான ஒத்திசைவு கணக்கீடுகள் உட்பட பல் முனை உத்திகளைப் பின்பற்றப்பட உள்ளது.
நீலகிரி வரையாடுகள், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் சிறப்பினமாகும். ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் உள்ள வால்பாறை பகுதியானது நீலகிரி வரையாடுகளுக்கான உகந்த வாழ்விடமாக விளங்குகிறது.