மத்திய பிரதேசம் மாநிலத்தில் விஷால் மோகியா (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்நிலையில் திருமணமான நாளிலிருந்து தன் கணவரின் நிறத்தை காரணம் காட்டி மனைவி பிரச்சினை செய்து வந்ததோடு அவரை கேலியும் செய்துள்ளார். அடிக்கடி நிறத்தை காரணம் காட்டி தன் கணவருடன் அவர் தகராறு செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து குழந்தை பிறந்தவுடன் தன் குழந்தையை கணவர் வீட்டில் விட்டு விட்டு தாய் வீட்டிற்கு விஷாலின் மனைவி சென்று விட்டார். பின்னர் தன் மனைவியை அழைத்து வருவதற்காக அவர் சென்றபோது நிறத்தை காரணம் காட்டி அவருடன் செல்ல மனைவி மறுத்துவிட்டார். இது தொடர்பாக விஷால் மற்றும் அவருடைய தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.