உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் வசிப்பவர் ரஞ்சித் யாதவ். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய வீடும் அதே பகுதியில் தான் உள்ளது. ரஞ்சித் யாதவ்வின் நண்பர்கள் சிலர் மொட்டை மாடியில் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவருடைய வீட்டின் மொட்டை மாடியில் மது அருந்திய நண்பர்கள் ரஞ்சித் யாதவையும் மது அருந்த கூறினார்கள்.

ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ரஞ்சித்தை  கீழே தூக்கி வீசி இருக்கிறார்கள். மேலும் அவரை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதை அந்த குடியிருப்பில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானதையடுத்து போலீசார் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.