
பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகள் சில நேரங்களில் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டும். அதேசமயம் சில நேரங்களில் சமையலறை மற்றும் வாகனங்கள் என பல இடங்களில் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவும்.
பொதுவாகவே பாம்பு என்றால் படையே நடுங்கும். விலங்குகளில் பலவும் கூட பாம்பை சீண்டிப் பார்க்கும் தைரியத்தை கொண்டிருப்பதில்லை. ஆனால் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் தவளை ஒன்று பாம்பை ஏமாற்றி அதன் பிடியிலிருந்து தப்பிக்கிறது. தவளை ஒன்று பெரிய இரும்பு கேட் ஒன்றின் மீது ஏறுகிறது. பாம்பு ஒன்று அதன் கால்களை மிக கெட்டியாக பிடித்துக் கொண்டு அதனை விழுங்க முயற்சி செய்கிறது. ஆனால் தவளை தனது முழு வலிமையையும் திரட்டி பாம்பின் கிடுக்கு பிடியிலிருந்து தப்பித்துச் செல்கிறது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Frog Narrowly Escapes Being A Snake’s Dinner 🫣 pic.twitter.com/8CGqHjMHGe
— Terrifying Nature (@TerrifyingNatur) August 14, 2023