
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மேலமணக்குடி கிராமத்தில் 21 வயதான பாலகணபதி என்பவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாகக் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதையடுத்து நடந்த போலீசார் விசாரணையில், இது சாதாரண மரணம் அல்ல, கொடூரமான கொலை என உறுதி செய்யப்பட்டது.
பாலகணபதி சாலியந்தோப்பைச் சேர்ந்தவர். அவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் கடந்த காலத்தில் காதலில் இருந்தார். ஆனால் அந்த உறவு முறிந்து தற்போது ஐஸ்வர்யா வினோத்குமார் என்றவரை திருமணம் செய்து மேலமணக்குடியில் வாழ்ந்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் பாலகணபதி, ஐஸ்வர்யாவை சந்தித்து பேசுவதாகவும், இது அவரது கணவர் வினோத்குமாருக்கு தெரிந்து வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வினோத்குமார், பாலகணபதியை அழைத்து சென்று நண்பர்களுடன் வெள்ளாற்றின் கரையில் மது அருந்தியுள்ளார். அப்போது, பாலகணபதி “அவள் ஒரு புஷ்பா… நீ தான் புஷ்பா புருஷன்” என கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் வினோத்குமார் கோபத்தில் நண்பர்களுடன் இணைந்து பாலகணபதியை கொடூரமாக வெட்டி கொன்றுள்ளனர். இதில் பாலகணபதியின் தலை மற்றும் கைகளில் ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, இதுவரை மூன்று பேரை கைது செய்துள்ளனர். மற்ற குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வோம் என கடலூர் மாவட்ட எஸ்பி உறுதி தெரிவித்துள்ளார்.