இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் அந்த நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டு ஆகியோருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தற்போது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு சென்றால் கைது செய்யப்படலாம்.

அதாவது காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில் போர் குற்றத்திற்காக இருவருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் காசா மக்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு தடை விதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இருவருக்கும் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.