பேடிஎம் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன் நிறுவனத்தின் பல அலுவலகங்களிலும் பணிபுரியும் சுமார் 1000 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி சேவையை வணங்கும் நிறுவனமான இந்த நிறுவனம் நிதி ஆதாரங்கள் பெறுகாதால் கடந்த சில மாதங்களாக செலவினை குறைப்பு நடவடிக்கையை திட்டமிட்டு வந்தது.

சமீபத்தில் நிதி நிறுவனங்கள் வழங்கும் படங்களுக்கான வழிமுறைகளை ஆர்பிஐ கடுமையாக்கிய நிலையில் பொருளை வாங்கிக் கொண்டு பிறகு பணம் செலுத்துவது உள்ளிட்ட சிறிய கடன் சேவைகளை பேடிஎம் நிறுவனம் நிறுத்திய நிலையில் ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 10% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.