ஆந்திரா மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமா. இவர் ஐஏஎஸ் அதிகாரி. நேற்று மனுநீதி நாள் என்பதால் ரமா பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுவதற்காக பீலேரு பகுதியில் இருந்து ராயச்சோட்டிக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஏர்ரகுண்ட்லா பகுதியில் வைத்து ரமாவின் கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுகுறித்து அறிந்த ராயசோட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அவரது இறப்பிற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.