
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை நோக்கி நேற்று முன்தினம் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தின் டிரைவர் கார்த்திக்(33)பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். அதேசமயம் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் விஜயகாந்தன்(39)என்பவர் ஓட்டுநராக வேலை பார்த்தார். வெங்கடேசன்(53) என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். நேற்றுமாலை 4.40 மணியளவில் சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலம் அருகில் தனியார் பேருந்தும் அரசு பேருந்தும் எதிரெதிரே வந்தது.
அப்போது இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டது. அந்த விபத்தில் டிரைவர்கள், கண்டக்டர் , பயணிகள்உட்பட 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் கார்த்திக்கிற்கு இரண்டு கால்களும் முறிந்து விட்டது. இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பொக்லைன் இயந்திரம் மூலம் இரண்டு பேருந்துகளையும் அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.