
இத்தாலி நாட்டில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் எலேனா மரகா என்ற 29 வயது பெண் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கல்வி அறிவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் 5 வருடங்களாக கத்தோலிக்க நர்சரி பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இவர் பகலில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த நிலையில் இரவில் ஆபாச பட அழகியாக இருந்துள்ளார். அதாவது இவர் ஒரு ஆபாச இணையதளத்தில் பகுதிநேர ஆபாச அழகியாக இருந்தது அந்த பள்ளியில் பணி புரியும் மாணவர்களின் பெற்றோர் சிலருக்கு தெரிய வந்தது. அவர்கள் இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்ததால் அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது.
இது குறித்து எலேனா கூறும்போது நான் பணி புரியும் பள்ளியில் மாதம் 1.1 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். இது எனக்கு போதுமானதாக இல்லாததால் நான் பகுதி நேர வேலை தேடி வந்தேன். அப்போதுதான் இந்த ஆபாச வலைதளத்தை பயன்படுத்திக் கொண்டேன். இதை நினைத்து நான் துளி அளவு கூட வருத்தப்படவில்லை. குழந்தைகளுக்கு பாடம் நடத்துவது எனக்கு பிடிக்கும். அதே நேரத்தில் அந்த ஆபாச இணையதளம் மூலமாக நான் அதிகமாக பணமும் சம்பாதிக்க விரும்புகிறேன். இதனால்தான் அந்த இணையதளத்தில் ஒரு ஆபாச கணக்கு தொடங்கி என்னுடைய புகைப்படத்தை பதிவு செய்தேன். எனக்கு கிடைக்கும் ஒரு மாத சம்பளத்தை விட ஆபாச இணையதளம் மூலம் ஒரே நாளில் அதிக பணத்தை சம்பாதிக்கிறேன்.
நான் யாரையும் துன்புறுத்தாமல் தான் அதில் பகுதி நேரமாக வேலை பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதாவது ஆசிரியை என்பவர் மாணவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்பிக்க வேண்டிய இடத்தில் இருப்பதால் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று சிலர் கூறுகிறார்கள். மேலும் அதே நேரத்தில் சிலர் அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் அதில் தலையிடவோ அதை பற்றி கருத்து சொல்லவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் கூறுகிறார்கள்.