பீகார் மாநிலம் பாட்னாவில் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள ஓடுபாதையில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது அங்கு ஒரே ஒரு பாம்பு மட்டும் இருந்தது. அப்போது அந்தப் பாம்பை கூட்டமாக வந்த 3 கீரிகள் சூழ்ந்து தாக்கியது.

இருப்பினும் அந்தப் பாம்பு தன்னை பாதுகாத்துக் கொள்ள அவைகளை கொத்தியது. பொதுவாக பாம்புக்கும் கீரிக்கும் தீராத பகை உண்டு. இதை நாம் பல கதைகளில் கேட்டிருப்போம். இந்நிலையில் தற்போது ஒரே ஒரு பாம்பு மட்டும் தன்னை பாதுகாத்துக் கொள்ள போராடிய நிலையில் கூட்டமாக கீரிகள் அதனை தாக்கியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ மிரள வைப்பதாக இருக்கிறது. இதற்கு பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.