
தமிழ்நாட்டில் உள்ள 10 முக்கிய கோவில்களில் விசேஷ நாட்களில் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படுவதாக தற்போது அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். அதாவது சட்டசபையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது அமைச்சர் சேகர்பாபு இந்த அறிவிப்பினை வெளியிட்டார். அதன்படி திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் கோவில்களில் கட்டண தரிசனம் முறை ரத்து செய்யப்படும்.

குறிப்பாக ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் உட்பட 10 கோவில்களில் கட்டண தரிசனம் முறை ரத்து செய்யப்படுவதோடு திருவண்ணாமலை கோவிலில் பௌர்ணமி அன்றும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி என்றும் கட்டண தரிசன முறை ரத்து செய்யப்படும். மேலும் புகழ்பெற்ற பழனி திருக்கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளில் கட்டண தரிசன முறையில் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.