
சூடானில் அதிகாரங்களை யார் கையில் வைத்திருப்பது என்ற நோக்கில் ராணுவ மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகின்றது. கடந்த இரண்டு மாதங்களாக சூடான் தலைநகர் கார்ட்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். இந்நிலையில் அனாதை இல்லத்தில் ஆறு வாரங்களில் 60 குழந்தைகள் அங்கு உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போதிய உணவு மற்றும் காய்ச்சலால் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.