
திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு ஆகியவை கலந்ததாக எழுந்த எழுந்த பிரச்சனை நாடு முழுவதிலும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அதனைத் தொடர்ந்து பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு கலக்கப்படுவதாக வதந்திகள் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என கூறப்பட்டது.
இதனிடையே பிரபல இயக்குனர் மோகன், பழனியில் வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்து கலக்கப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக வதந்தி பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு இயக்குனர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.