
விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. விஜய் தனது அரசியல் கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் முன்னோடிகள், கட்சி கொடி விளக்கம் என அனைத்தையும் விளக்கமாக பேசினார். அது மட்டும் இல்லாமல் அரசியல் கட்சிகளையும் நேரடியாக விமர்சனம் செய்தார். விஜய்யின் பேச்சை கேட்டு அவரது தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். பலரும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக மாநில செய்தி தொடர்பாளரான ஏ.என்.எஸ் பிரசாத் கூறும்போது, விஜயின் பேச்சு படம் பார்ப்பது போல இருந்ததாக கிண்டல் அடித்துள்ளார். மேலும் வெற்றி கழக தலைவர் விஜய் வெட்டி கழக தலைவராக மாறக்கூடாது. அதிகார அரசியலுக்காக திமுக வழியிலும், ஓட்டு வங்கி அரசியலுக்காக சீமான் பாதையிலும் செயல்பட முடிவு எடுத்திருப்பது மக்களை ஏமாற்றும் இப்படியாக உள்ளதாக ஏ.என்.எஸ் பிரசாத் கூறியுள்ளார்.