தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அரசு பேருந்தில் இருந்து விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் அரசு பேருந்தில் இருந்து மாணவி கீழே விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சாலை வளைவில் திரும்பும் போது படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த மாணவி நிலைதடுமாறி தவறி விழுந்தார். அந்த மாணவி மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது.

இதனால் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.