தமிழக பள்ளிக்கல்வித்துறையின் ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் மாணவர்கள் முன்பாக உரையாடினார் .அப்பொழுது பேசிய அவர் படிக்காமலும் பெரிய ஆளாகலாம் என்று யாரோ ஒன்று இரண்டு பேரை பார்த்து தவறான பாதைக்கு யாரும் சென்று விடக்கூடாது.

கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்பதை மாணவ செல்வங்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .கல்வியெனும் நீரோடை முழுதாக பாய்ச்சுவதற்கு இந்த அரசு உங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.