
ஜப்பானில் நடந்த ஒரு திகிலூட்டும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தைச் சேர்ந்த பெண் பயணியான நடலிசி டக்சிசி, ஜப்பானை சுற்றி பார்க்க வந்தார். நடலிசி டக்சிசிதங்கி இருந்த அறையில் படுக்கையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, கீழிருந்து ஒரு வாசனை வந்ததை கவனித்தார்.
உடனே பார்வையிட்டபோது, படுக்கையின் கீழ் மர்ம நபர் ஒருவர் இருப்பதை கண்டார். நடலிசி டக்சிசி பார்த்தவுடன் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதை தொடர்ந்து நடலிசி ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் கொடுத்தார், பின்னர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
View this post on Instagram
ஹோட்டல் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலற்ற நிலையில் இருந்தன. நடலிசி டக்சிசி தங்கி இருந்த அறையில் மர்ம நபருக்கு சொந்தமான ஒரு பவர் பாங்கும் யுஎஸ்பி கேபிளும் மீட்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு பிறகும், ஹோட்டல் நிர்வாகம் நடலிசிக்கு முழு பணத்தை திருப்பிக் கொடுக்க மறுத்துள்ளது.
நடலிசி உடனே வேறு ஓர் ஹோட்டலுக்கு மாறினார். ஆனால் நடலிசி டக்சிசி போலீசில் கொடுத்த புகார் தொடர்பான எவ்வித ஆவணமும் அவருக்கு வழங்கப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக நடலிசி தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். “இந்த பயணம் என் கனவு பயணமாக இருக்க வேண்டியதாய் இருந்தது, ஆனால் நடந்தது என் வாழ்க்கையை முழுமையாக மாற்றிவிட்டது” என்று அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. சமூக வலைதள பயனர்கள் இதற்கு கடும் கண்டனங்களையும் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். பெண்கள் தனியாகப் பயணிக்கும் போது அதிக முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என்பதையும், பாதுகாப்பான ஹோட்டல்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையும் இந்த சம்பவம் சுட்டி காட்டுகிறது.