உத்திரபிரதேசத்தில் உள்ள ஹாப்பூர் மாவட்டத்தில் டெல்லி லக்னோ நெடுஞ்சாலை உள்ளது. இங்கு சிவப்பு நிறத்தில் கேட்பாராற்று ஒரு பெரிய சூட்கேஸ் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற சில வாகன ஓட்டிகள் பார்த்த நிலையில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது ஒரு பெண்ணின் சடலம் உள்ளே இருந்தது.

அந்த பெண்ணுக்கு சுமார் 25 முதல் 30 வயதுக்குள் இருக்கும். பின்னர் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆதாரங்கள் சேர்க்கப்பட்ட நிலையில் அந்த பெண் இறந்து ஒரு நாளாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டதோடு அந்த பெண்ணின் உடம்பில் காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையில் நடத்தி வருகின்றனர்