சென்னை திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் ஒரு ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு கௌதம் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இவர் வழக்கறிஞர். இவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் எடுப்பதற்காக சென்ற கௌதமை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் சரமாறியாக வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.‌இது குறித்த தகவலின் பேரில் திருவான்மியூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கௌதமை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.