திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு பகுதியில் பட்டப்பகலில் ஊருக்குள் புகுந்து கரடிகள் அட்டகாசம் செய்யும். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டிய பாபநாசம், மணிமுத்தாறு போன்ற பகுதிகளில் அடிக்கடி கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வருகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

உடனே வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்து கூண்டு வைத்து பிடித்து வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடுகின்றனர். இன்று மணிமுத்தாறு பகுதிக்குள் பட்டப் பகலில் ஊருக்குள் கரடி புகுந்தது அந்த கரடியை பொதுமக்கள் விரட்ட முயன்றனர். அந்த கரடி மரத்தின் மீது ஏறி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அந்த கரடியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.