சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு மளிகை கடை உள்ளது. இந்த கடையை சபரிநாதன் என்பவர் நடத்தி வருகிறார். இவர் நேற்று தன்னுடைய கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சத்யராஜ் என்பவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் வந்தார். இதில் சத்யராஜ் பாமக கட்சியின் தென் சென்னை கிழக்கு இளைஞர் மாவட்ட அணி தலைவர் ஆவார். அவருடன் வந்தவர்கள் பாமக கட்சியின் நிர்வாகிகள்.

அவர்கள் சபரிநாதனை திடீரென கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சபரிநாதன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சில்லரை கேட்டதால் பாமக நிர்வாகிகள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.