விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கோட்டையூர் கிராமத்தில் ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.‌ இந்த பட்டாசு ஆலையில் திடீரென இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலை இடிந்து தரைமட்டமான நிலையில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் தருவதாக இருக்கிறது.

இந்த விபத்தில் சிவக்குமார் (56), வேல்முருகன் (54), காமராஜ் (54), கண்ணன் (54), மீனாட்சி சுந்தரம் (46), நாகராஜ் (36) ஆகியோர் உயர்ந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அதன் பிறகு விபத்தில் படுகாயம் அடைந்து முகமது சுதீன் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் வழங்குவதாகவும் உத்தரவிட்டுள்ளார்.