தீபாவளி நேரத்தில் வாலிபர்கள் ஆபத்தான முறையில் பட்டாசு வெடிக்கின்றனர். இதனால் அசம்பாவிதம் ஏற்படுகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் 32 வயதுடைய நபர் நண்பர்கள் வைத்த சேலஞ்சிர்காக பட்டாசு மீது அமர்ந்துள்ளார். அப்போது பட்டாசு வெடித்து சிதறியதால் அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த 31ஆம் தேதி தீபாவளி அன்று சபரீஷ் என்பவர் தனது நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளார்.

அப்போது பட்டாசு வெடிக்கும் போது அதன் மீது உட்கார்ந்த காட்டினால் ஆட்டோ வாங்கி தருவதாக நண்பர்கள் தெரிவித்தனர். வேலை இல்லாமல் இருந்த சபரீஷ் அதற்கு சம்மதித்துள்ளார். உடனே நண்பர்கள் சாலையில் ஒரு பட்டாசை வைத்துள்ளனர். சபரீஷ் அந்த பட்டாசை பற்ற வைத்தவுடன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதற்கிடையே பட்டாசு மீது உட்கார்ந்த சபரீஷ் பட்டாசு வெடித்ததால் படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து படுகாயமடைந்த சபரீஷை நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சபரீஷ் உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக போலீசார் 6 பேரை கைது செய்து நடத்தி வருகின்றனர்.