லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு சில இடங்களில் லஞ்சம் கொடுத்தால்தான் சில வேலைகள் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.  இந்த நிலையில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெறுவதை தடுக்கவே ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அமலாகியுள்ளது.

எனினும் சில நேரம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. இது குறித்து தமிழக அரசின் ஊழல் தடுப்பு, இயக்குனரகத்திற்கு 044-22321090, 044-22321085, 044-22310989, 044-22342142 ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ, 044-22321005 க்கு பேக்ஸ் அடைப்பியோ, [email protected] க்கு மெயில் அனுப்பியும் புகார் செய்யலாம்