தமிழக ஆளுநர் ரவி நேற்று சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி ஏ.எஸ் சகஜானநந்தரின் 135 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நம்முடைய நாடு சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் நம்முடைய தலித் சகோதர சகோதரிகள் சந்திக்க முடியாத அனைத்து வகையான சமூக கொடுமைகளையும் அனுபவிக்கிறார்கள். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதல்வராக வேண்டும். பட்டியலத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் நாற்காலியில் அமர முடியாத நிலை இருக்கிறது.

சில இடங்களில் பட்டியல் இனத்தை சேர்ந்த மக்கள் காலணிகள் அணிந்து கூட நடக்க முடியவில்லை. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் காரணங்களுக்காக 200 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். பட்டியலை இன மக்கள் கீழ்வெண்மணியில் கொல்லப்பட்ட நிலையில் அந்த பகுதியில் இதுவரை அவர்களுக்கு நல்ல வீடுகள் இல்லை. மேலும் சகஜானந்தரின் கனவை நினைவாக்க பட்டியலின மக்களை முன்னே கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.