
தூத்துக்குடி மாவட்ட கருவூலத்தில் முருகேசன் என்பவர் உதவியாளராக வேலை பார்த்தார். கடந்த 2022-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக முருகேசன் உயிரிழந்தார். இந்த நிலையில் கணவருக்குரிய பண பலன்களை கேட்டு முருகேசன் மனைவி தமிழ்ச்செல்வி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விடுமுறை ஊதியம், பிஎஃப், பொது பிஎஃப் என்ற கணக்கீட்டின் படி முருகேசனின் குடும்பத்தினருக்கு 17.50 லட்ச ரூபாய் பணம் வழங்கப்பட்டது. இன்னும் 15. 25 லட்சம் பாக்கி இருக்கிறது.
முருகேசன் தாய் கலையரசி தனது மகனுக்கு உரிய பணிக்கொடை பணத்தில் தனக்கு ஒரு பகுதி வழங்க வேண்டும் என மாவட்டம் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததார். அதனால் தான் பாக்கி தொகை வழங்கப்படாமல் இருக்கிறது. மகன் வேலைக்கு செல்ல தாயார் அன்பு, பாசம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்கியிருப்பார். எனவே ஓய்வூதிய பணப்பலன் பாக்கியில் தாயாருக்கும் உரிமை உண்டு. எனவே தமிழ்ச்செல்விக்கு 8 லட்சத்து 15 ஆயிரத்து 277 ரூபாயும், கலையரசிக்கு 7 லட்ச ரூபாயும் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.