பணி நேரத்தில் செவிலியர்கள் குரங்கு ஒன்றோடு வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அந்த செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். உத்திரபிரதேச மாநிலம் பஹ்ர் என்ற பகுதியில் அரசு மகளிர் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் பணி நேரத்தில் இருந்த செவிலியர்கள் குரங்கு குட்டி ஒன்றோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

இது குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலானது. இதனை அடுத்து மருத்துவமனை நிர்வாகம் அந்த ஆறு செவிலியர்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.