உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையடுத்து, பிரபல யோகா மாஸ்டரான பாபா ராம்தேவின், பதஞ்சலி நிறுவனம் உற்பத்தி செய்யும் 14 மருந்துகளுக்கு உத்தராகண்ட் மாநில அரசு தடை விதித்திருந்தது.  அதாவது விளம்பரங்களில் தவறான தகவல்கள் அளித்ததாக கூறி பதஞ்சலி நிறுவனத்தின் 14 பொருள்களுக்கான உரிமத்தை ரத்து செய்திருந்தது.

இந்த நிலையில், அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டதாகவும் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டதாகவும் பதஞ்சலி நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஸ்வசரி கோல்டு, முக்தவாதி எக்ஸ்ட்ரா பவர், மதுகிரிட் போன்ற பொருட்களும் இதில் அடங்கும்.