தமிழகத்தில் தற்போது 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் மூன்று பேர் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொள்கிறார்கள்.

அதாவது கரூர் மாவட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட அதிகாரிகள் மூன்று இடங்களில் இன்று
காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதன்படி அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவரது வீட்டில் கேரளாவை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இது போக கொங்கு மெஸ் மணி, சக்தி மெஸ் கார்த்தி ஆகியோரது வீடுகளிலும்  சோதனை நடைபெறுகிறது.

அதன் பிறகு திமுக கட்சியின் எம்.பி ஜெகத்ரட்சகனின் மதுபான ஆலை நிறுவனம், டாஸ்மாக் தலைமை நிர்வாகம் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களால் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. மேலும் ஆளும் கட்சியினருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவதால் திமுகவினர் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.