
மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 294 தொகுதிகளிலும், “INDIA” கூட்டணி 232 தொகுதிகளிலும் வெற்றிப் பெற்றது. இதனால் மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவு முக்கியம் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கவிருக்கிறது.
இக்கூட்டத்திற்குப் பின் பிரதமர் பதவியை அவர் ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால், மொத்த அமைச்சரவையையும் கலைத்துவிட்டு கூட்டணி கட்சிகளுடன் தே.ஜ. கூட்டணி புதிய அமைச்சரவையை அமைக்க வாய்ப்புள்ளது.