
ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அவர் அளித்தார். ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் ஹேமந்த் சேரன் ஜனவரி 31ம் தேதியன்று அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஜூன் 28ம் தேதி உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.