
இந்திய ஆஞ்சியோ பிளாஸ்டியின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் மேத்யூ சாமுவேல் களரிக்கல் நேற்று காலமானார். இவருக்கு 70 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இவர் கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் பிறந்தவர். ஆஞ்சியோ பிளாஸ்டி அறுவை சிகிச்சையில் நிபுணராக விளங்கியதால் அதன் தந்தை என்று அழைக்கப்பட்டார். இவருக்கு கடந்த 2000 ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.