குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சாமுண்டா நகர் பகுதியில் வசிக்கும் நீராலி என்ற பெண் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவுக்காக பன்னீர் டிக்கா சாண்ட்விச்சை இணைய வழி செயலி மூலமாக வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு சிக்கன் சாண்ட்விச் கிடைத்துள்ளது. இதனை அறியாமல் சாப்பிட்ட அந்த பெண் அகமதாபாத் மாநகராட்சியின் சுகாதாரத் துறையில் புகார் அளித்தார்.

தனக்கு இழப்பீடாக அந்த நிறுவனம் ஐம்பது லட்சத்தை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தும் போது, RYLY வென்ச்சர்ஸ் உணவு நிறுவனம் இந்த தவறுக்காக அந்த பெண்ணுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதே தவறு மீண்டும் நிகழ்ந்தால் உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.