சென்னையில் இன்று கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த நாணயத்தை மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெளியிடுகிறார். இந்த விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்கும் நிலையில் அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் உட்பட முக்கிய அரசியல் புள்ளிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கலைஞர் கருணாநிதி நாணய வெளியீட்டு விழா தொடர்பாககமுதல்வருக்கு கடிதம் எழுதினார். அதில் கருணாநிதி பன்முகத்தன்மை கொண்டவர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் இதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய x பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.