ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ள பிரபலமான சப்பன் துகான் பகுதியில் ஒரு உணவுக் கடை வைக்கப்பட்ட முன்பு போஸ்டர் கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. “பன்றிகளும் பாகிஸ்தான் குடிமக்களும் சப்பன் துகானில் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என எழுதியிருந்த அந்த போஸ்டர், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரின் முகத்துடன் பன்றியின் முகம் பதிக்கப்பட்ட படம் ஒன்றையும் கொண்டிருந்தது.

 

இது பற்ற , சப்பன் துகான் சங்கத் தலைவர் குஞ்ஜன் ஷர்மா கூறுகையில், “இந்த தாக்குதலில் மத அடிப்படையில் இந்தியர்களை குறிவைத்தனர். இதன் எதிரொலியாக நாங்கள் இப்படி ஒரு கடும் முடிவை எடுத்துள்ளோம். நியாயம் கேட்டு நாங்கள் பிரதமர் மோடியை நம்புகிறோம்,” என்றார். பகிரங்க எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் அந்தக் கடைத் தெருவில் உள்ள அனைத்து கடைகளிலும் பணியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மரியாதை செலுத்தினர்.

மூடுபனி, பைன் காடுகள் மற்றும் இயற்கை அழகில் மகிழ்ந்துகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ சீருடையில் இருந்த பயங்கரவாதிகள் நடத்திய அந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மேலும் அந்த வகையில் தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தான் பன்றிகளையும் பாகிஸ்தானியர்களையும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி பாக் ராணுவ தளபதி போட்டோவை பன்றி போன்று சித்தரித்து அந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளத்தின் தீயாக பரவி வருகிறது.