சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், கஞ்சா கடத்தல் வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மனோஜ் (23) என்ற இளைஞர், காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு பின்பு வீட்டுக்குச் செல்வதற்காக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார். இந்த நிலையில், காரில் வந்த ஒரு மர்ம கும்பல், டி.டி. நகர் பகுதியில் மனோஜின் வாகனத்தை இடித்து தள்ளினர். பின்னர் மனோஜையும், அவரது நண்பர்களையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.  இந்த தாக்குதலில் மனோஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர்கள் சபீக் மற்றும் கார்த்திக் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பரபரப்பான கொலை சம்பவம் காரைக்குடியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக டிஎஸ்பிகள் பார்த்திபன், கவுதமன் மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.