
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனியில் ரவின்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் (21 year old youth dies) வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். நேற்று மாலை பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை- சேலம் சாலையில் திருச்சி சாலை இணைப்பு பகுதியில் அதிவேகமாக சென்று வீலிங் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. ஹெல்மெட் அணியாததால் மின் கம்பம் மீது மோதி மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் படுகாயமடைந்த ரவீன் குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.