ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 27 பேர் கொல்லப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பீகாரின் மதுபானியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது, பஹல்கான் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் துணை நிற்கும் எனக் கூறியுள்ளார்.