இஸ்ரேல் மீது கடந்த வருடம் காசா தாக்குதல் நடத்திய நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலும் காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் அடுத்ததாக ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதோடு பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் போன்றவைகள் வெடிப்பு சம்பவங்களும் லெபனானில் நடந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு சமீபத்தில் ஏமன் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இந்த தாக்குதல்களால் கோபமடைந்த ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது. ஆனால் இந்த எச்சரிக்கையை மீறி தற்போது ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்தது. சுமார் 400 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்திய நிலையில் மத்திய கிழக்கு பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை முன்கூட்டியே அமெரிக்கா கணித்த நிலையில் இஸ்ரேல் அனைத்து விதமான முன்கூட்டியே நடவடிக்கைகளையும் எடுத்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் குறிப்பாக பதுங்கு குழிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு ஈரான் ஏவிய ஏவுகணைகளை வானில் செயலிழக்க வைத்து ஆளில்லாத பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா எச்சரித்த போதிலும் ஈரான் அதனை மீறி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால் இந்த விவகாரத்தில் அமெரிக்கா தலையிட கூடும். அதன்படி தற்போது அதிபர் ஜோ பைடன் ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு இஸ்ரேலுக்கு தங்களுடைய முழு ஆதரவை வழங்கும் என்று அறிவித்துள்ளது. ஒருவேளை இந்த விவகாரத்தில் ரஷ்யாவும் தலையிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் மூன்றாம் உலகப் போர் அபாயம் ஏற்பட்டுள்ளது.