
கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சாலையில் வேகமாக இரண்டு லாரிகள் வந்தது. இது இரண்டு கார்கள் மற்றும் ஒரு பள்ளி பேருந்து மீது அடுத்தடுத்து மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அப்போது ஒரு கண்டெய்னர் லாரி ஒரு கார் மீது கவிழ்ந்தது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில் அந்த காரில் இருந்த ஒரு குழந்தை உட்பட 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதன் பிறகு இந்த விபத்தில் பைக்கில் சென்ற ஒருவரும் உயிரிழந்தார். மேலும் 6 பேரின் சடலங்களையும் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் இந்த தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.