உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உன்னாவ் மாவட்டத்தில் லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலை உள்ளது. இங்கு டபுள் டெக்கர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே பால் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கோர விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது‌. இந்த விபத்து இன்று அதிகாலை 5:15 மணியளவில் நடந்துள்ளது. மேலும் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்த உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.